2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உளநோய்களோடு வெற்றிகரமாக வாழுதல்

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு 'உளநோய்களோடு வெற்றிகரமாக வாழுதல்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர் ஊர்வலம் வெள்ளிக்கிழமை (10)  நாவற்காட்டில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்) திரு.எஸ்..ஸ்ரீதரனின் தலைமையில் அதிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கு பற்றிய இவ்வூர்வலம், நாவற்காடு வைத்தியசாலையிலிருந்து ஊர் வீதிகளினூடாக பாடசாலையை; சென்றடைந்தது.

சமூகப் பொருளாதாரப் பிரச்சிகைள் பலவற்றை உதாரணம்காட்டி இவற்றை வெற்றிகொள்வதற்கு உளநல மேம்பாட்டின் அவசியம் பற்றி  வவுணதீவுப் பிரதேச, சுகாதார வைத்திய அதிகாரியான செல்வி.ரி.கலைச்செல்வி விளக்கமளிதார்.

பிளான் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் டேவிட் சதானந்தன், எஸ்.கோ நிறுவன பணிப்பாளர் எஸ். ஸ்பிரித்தியோன், பேசிக்நீட் நிறுவனத்தின் இலங்கைக்கான நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் வாணி சுரேந்திரநாதன் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர்களான திரு.சி.ஸ்ரீதரன், திரு.அ.ஜெயகரன் ஆகியோர் பங்கேற்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X