2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அபிவிருத்தி, நிரந்தர அமைதிக்காக வாக்களிக்களிக்க வேண்டும்: சந்திரபால

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இனியொரு யுத்தமும் அழிவும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அபிவிருத்திக்காகவும் நிரந்தர அமைதிக்காகவும் நாம் வாக்களிக்களிக்க வேண்டும் என்று கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம். சந்திரபால தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனைக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (10) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கிளை ஸ்தாபிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த கால அநாவசிய யுத்தத்தின் போது இழந்தவைகளை மக்கள் மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும். நகரப்புற மக்களை விட கிராமப் புறத்து மக்களின் வாழ்க்கைதான், யுத்தத்தின் போது சீரழிக்கப்பட்டது. பிள்ளைகளின் கல்வி, பொருளாதாரம், உயிர், உடமைகள், நிம்மதியான வாழ்வு எல்லாவற்றையுமே மக்கள் இழந்து விட்டார்கள்.

இந்த இழப்புக்களை படிப்படியாக நாம் ஈடு செய்து கொண்டு இனி முன்னேறுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இதற்கு கிராம மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டும் உங்கள் காலடிக்குத் தேடி வந்து உணர்ச்சியூட்டும் அரசியல் வாதிகள், பின்னர் உங்கள் வாக்குகளை சூறையாடிக் கொண்டு மாயமாகி மறைந்து பின்னர் அடுத்த தேர்தலுக்கு வருகின்றார்கள்.

நமது பிள்ளைகளுக்கான இலவசக்கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சமூக சேவைத் திட்டங்கள், நலன்புரி வசதிகள், வேலை வாய்ப்புக்கள் என்று எத்தனையோ விதமான அரச சேவைகளை நாம் அனுபவிக்கின்றோம்.

ஆயினும், தேர்தல் காலத்தில் மட்டும் நாம் உணர்ச்சியூட்டப்பட்டவர்களாக அரசுக்கு எதிராக வாக்களின்றோம்.

எதிர்ப்பு அரசியலால் எதுவித பயனும் கிட்டப்போவதில்லை. மாறாக இழப்புக்களே அதிகரிக்கும். கடந்த 66 வருடங்களாக தமிழ் மக்கள் எதிர்ப்பு அரசியலுக்கே பழக்கப்படுத்தட்டவர்கள். என்றாலும் இனி அதிலிருந்து நாம் மாற வேண்டும்' என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X