2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விபரங்களை வழங்குங்கள் : சிப்லி பாறூக்

George   / 2014 ஒக்டோபர் 11 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த கால யுத்தத்தின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் சம்பந்தமான விபரங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சமரப்பிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், சனிக்கிழமை(11) தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான ஆவணம் ஒன்றினை நேரடியாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இம்மாதம் 28ஆம் திகதிற்கு முன்பாக தகவல்களை திரட்டி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2002ஆம்  ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் 2011 நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்களின் விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள், பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தகவல் சேகரிப்பு படிவத்தினை தனது காரியாலயத்தில் பெற்று தகவல்களை பூரணப்படுத்தி காத்தான்குடி மூன்றாம் குறிச்சி மெத்தைப்பள்ளிவாயல் வீதியிலுள்ள தனது காரியாலத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்வதாக  மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X