2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'பிரச்சினைகள் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம்'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்     


சிறுவர்களுக்கு ஏதும் பிரச்சினைகள் இருக்கும் என்று  பெற்றோர் உணர்ந்து அப்பிரச்சினைகளை பாடசாலை மற்றும் சமூக மட்டத்தில் தீர்க்கமுடியாது போனால், களுவாஞ்சிக்குடியில் உள்ள எமது பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம் என களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸாரின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி மட். சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இங்கு அவர் மேலும்  உரையாற்றுகையில்,

'இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் எனப் பார்க்கப்படும்போது, சிறுவர்களின் உரிமைகள் போணப்பட வேண்டும். இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுவதால் சிறுவர்களின் செயற்பாடுகளும் அதிகரிக்கப்படுகின்றன. இதற்காகவே  இந்த சிறுவர் தினம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களாகிய மாணவர்கள் அவர்களின் எதிர்காலத்தை  முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு கல்வியை முறையாகக் கற்கவேண்டும். அதற்கு பெற்றோர் உந்து சக்தியளிக்க வேண்டும்.

இங்குள்ள பெரியவர்கள் அனைவரும் சிறுவயதில் கடினமாக படித்ததாலேயே இவ்வாறு உயர் பதவிகளை வகிக்க முடிகின்றது. இதை பெற்றோரும் மாணவர்களும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்' என்றார். 

களுவாஞ்சிக்குடி மட். சரஸ்வதி வித்தியாலய அதிபர் த.கனகசூரியத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர்,  பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X