2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'உளநலத்திலும் பலம் வேண்டும்'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

மனிதர் ஒருவருக்கு உடற்பலம் இருப்பதுபோன்று, உளநலத்திலும் பலம் இருக்கவேண்டும். ஆனால், உளநலத்தில் உறுதியாக சிலர் இல்லாத காரணத்தாலேயே  பிரச்சினைகளை தாங்கிக்;கொள்ள முடியாமல்; தவறான முடிவுகளுக்கு உட்படுகின்றார்கள் என  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

உளநலம் தொடர்பில் மக்களின் மனப்பாங்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பில் நேற்று சனிக்கிழமை கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

'மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது  உளநலத்தை பேணுவதற்கு தயார்படுத்தவேண்டும். அவ்வாறிருக்கும் பட்சத்திலேயே  மனிதனுக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.

ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலிருப்பதே இன்றைய சமூகமாகும். சமூகத்திலுள்ளவர்கள் ஆளுமை விருத்தியை வளர்க்கவேண்டும். இது மனிதனின் உடலில் படியப்பட்ட ஒன்றாகக் காணப்படவேண்டும். மாறாக, ஆளுமை விருத்தி இல்லையென்றால் எந்தவித செயற்பாடுகளையும் மேற்கொள்ளமுடியாது.

உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட உள ரீதியான ஆய்வுகளின் படி, நான்கு பேருக்கு ஒருவர் என்ற சதவீதத்தில் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  ஆனால், இலங்கையில் ஐந்து நபர்களுக்கு ஒருவர் என்ற சதவீதத்தில்  உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உடற்பலத்துக்கு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால,; உள விருத்திக்கு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன. குறைபாடுகள் இருக்கவே செய்யும். அக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து வாழப் பழகவேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X