2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு தொடர்பில் விளக்கம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இஸ்லாமிய பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையின் அடிப்படையிலான விடயங்கள் தொடர்பில் உலமாக்களுடன் கலந்துரையாடுவதே ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாட்டின் நோக்கமாகுமென அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தின் செயலாளர் மௌலவி கே.ஆர்.எம்.ஸஹ்றான் றப்பானி தெரிவித்தார்.

ஸுன்னத் வல் ஜமா அத் உலமாக்களுக்கான மாநாடு தொடர்பில், ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (11) ஜாமியத்துர் றப்பானியா மண்டபத்தில் நடைபெற்றது.

இம்மாநாடு தொடர்பில் ஊடகவியளாலர்களுக்கு, அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தின் செயலாளர் மௌலவி கே.ஆர்.எம்.ஸஹ்றான் றப்பானி விளக்கமளித்தார்.

அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில்  எதிர்வரும் 18,19ஆம் திகதிகளில் உலமாக்களுக்கும் 20ஆம் திகதி பொதுமக்களுக்குமாக நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையைச் சேர்ந்த 300 உலமாக்கள் கலந்து கொள்வதுடன் இந்தியாவிலிருந்தும் உலமாக்கள் பேச்சாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இஸ்லாமிய பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையின் அடிப்படையிலான விடயங்கள்  தொடர்பில் உலமாக்களுடன் கலந்துரையாடுவதும் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களை ஒன்றினைத்து அவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதும் இஸ்லாமிய பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையின் அடிப்படையிலான விடயங்கள் தொடர்பில் உலமாக்களுடன் கலந்துரையாடலும் ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பற்றியும்  ஆராயப்படவுள்ளது. 

மேலும், பொதுமக்களை சாத்வீகத்தின் பால் வழிகாட்டவும் ஒற்றுமை, புரிந்துணர்வு, சமாதானம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பவற்றை பொதுமக்களுக்கு போதிக்கவும் உலமாக்களை ஊக்குவிக்கவும் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றியும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தவறான எண்ணங்களை நீக்குவதற்கான வழிமுறை பற்றி ஆராய்வதும் பொதுமக்களுக்கு இஸ்லாமிய பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கை விளக்கத்தை ஏற்படுத்துவதுமே இந்த மாநட்டின் நோக்கங்களாகும் என மேலும் அவர் தெரிவித்தார்.

இம்மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் மௌலவி எச்.எம்.எம்.இப்றாகீம் நத்வீ, ஏற்பாட்டுக் குழு செயலாளர் மௌலவி எம்.எல்.எம்.காசீம், மற்றும் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஐ.ஏ.எச்.நவாஸ் ஆகியோர் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X