2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இலக்கத்தகடு இல்லாத வாகனம் கைப்பற்றப்பட்டது

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி ஹைறாத் நகர் பகுதியிலுள்ள வளவொன்றில்; மறைத்துவைக்கப்பட்டிருந்த இலக்கத்தகடு இல்லாத  வாகனமொன்றை நேற்று சனிக்கிழமை (11) இரவு கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வளவில் வாகனமொன்று மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஐ.பி.மங்கள தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர்; இந்த  வாகனத்தை கைப்பற்றி காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்தனர்.

இந்த வாகனத்தில் இலக்கத்தகடு காணப்படவில்லை என்பதுடன்,  வாகன உரிமையாளர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணை செய்துவருவதுடன்,  இந்த வாகனத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X