2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சனசமூக நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் விவசாயத்திட்டக்  கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சனசமூக நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சனசமூக நிலைய தலைவர் த.விஷ்வலிங்கத்தின்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீனித்தம்பி யோககேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சனசமூக நிலையத்தை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று சனசமூக நிலைய உத்தியோகஸ்தர் த.கருணாநிதி, கிராம பெரியோர்கள், பொதுமக்கள், இளைஞர், யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் பன்முகப்படுத்தப்பட்ட 3 இலட்சம் ரூபாய் நிதியும் இளைஞர் விவசாயத்திட்டக் கிராம மக்களின் பங்களிப்பில் 2 இலட்சம் ரூபாய் நிதியுமாக  5 இலட்சம் ரூபாய் சனசமூக நிலைய கட்டடம்  அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள்  மேலதிக அரசாங்க அதிபராக  இருந்து அமரத்துவம் அடைந்த பூ.சங்காரவேல் இக்கிராமத்துக்கு ஆற்றிய சேவைக்கு கௌரவமளிக்கும் வகையில் அன்னாருடைய பெயரில் இந்தச் சனசமூக நிலையத்துக்கு 'இளைஞர் விவசாயத் திட்டம் சங்காரவேல் சனசமூக நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சனசமூக நிலையத் தலைவர் த.விஷ்வலிங்கம்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X