2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

செட்டிபாளையத்தில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து  செட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனம் இராசதுரை (வயது 56) என்பவரின் சடலத்தை  திங்கட்கிழமை (13) காலை மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த  03 பேர் மீன்பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (12) இரவு கடலுக்குச் சென்றனர்.

இந்த நிலையில்,  கடற்கரையிலிருந்த தோணியை கடலினுள் தள்ளிக்கொண்டிருந்தபோது, அங்கு வீசிய சுழல் காற்றாலும் பாரிய கடல் அலையாலும் சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போனதுடன்,  தோணியும்  கவிழ்ந்து 03 துண்டுகளாக உடைந்தன.

இதேவேளை, மற்றுமொருவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்றையதினம் (12) இரவு மீட்கப்பட்டு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

மற்றையவர் எவ்வித பாதிப்புமின்றி தப்பியுள்ளார். 

சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X