2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 13 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு வடக்கு கிராமத்தில் ஆணின் சடலமொன்று (13) இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

முருகேசு ரட்ணசிங்கம் (58) என்பவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவரது வீட்டிலிருந்து பொதுமக்கள் மற்றும் குறித்த நபரின் உறவினர்கள் சடலத்தை மீட்டு மகிழடித்தீவு வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரின் சடலம் தற்போது மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாக மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவநேசன் தெரிவித்தார்.

இவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X