2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நூதனசாலைக்கான ஆலோசனை பெற விசேட குழு டுபாய் பயணம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் அமைக்கப்படுகின்ற இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலைக்கான இறுதிக்கட்டப் பணியை  பூர்த்தியாக்குவதற்கு மேலதிக அனுபவங்கள், ஆலோசனைகளை பெறுவதற்காக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய தலைமையிலான விசேட குழுவினர் நாளை புதன்கிழமை (15)  மாலை டுபாய்க்கு பயணமாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இக்குழுவினர் டுபாய் செல்கின்றனர்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இந்த இஸ்லாமிய நூதனசாலை அமைக்கப்படுகின்றது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக், நூதனசாலைகள் திணைக்களத்தின் பிரதிப்பணிபாளர் விக்ரமசிங்க, தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட பொறியியலாளர் ஜகத், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக உத்தியோகத்தர் றவூப், இத்திட்டத்துக்கு பொறுப்பான கட்டடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் அடங்கலாக 9 பேர் கொண்ட இக்குழுவில் அடங்குகின்றனர்.

டுபாய் அரசாங்கத்தின் அனுமதியுடன் டுபாய் செல்லும் இக்குழுவினர் டுபாய், சார்ஜா, அபுதாபி ஆகியவற்றுக்கும் விஜயம் செய்து, உலகில் மிகப்பெரிய நூதனசாலை உள்ள டுபாய் நூதனசாலைக்கும் ஏனைய இஸ்லாமிய நூதனசாலைகளுக்கும் விஜயம் செய்து அங்கு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அனுபவங்களை பெறவுள்ளனர்.

இதன்போது பெறப்படும் அனுபவங்கள், ஆலோசனைகளின் அடிப்படையில் காத்தான்குடியில் அமைக்கப்படுகின்ற இஸ்லாமிய நூதனசாலையின் இறுதிக்கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X