2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செவிப்புலன் வலுவற்றோருக்கு விழிப்புணர்வுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


செவிப்புலன் வலுவற்றோருக்கான சட்டம் பற்றிய இலவச ஆலோசனை விழிப்புணர்வுக்கூட்டம் மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.

குடும்ப வன்முறை, உரிமைகள் உட்பட்ட பல்வேறு பிரச்சினைகளை எந்த நீதிமன்றத்தில் அணுகுதல் என்பது  பற்றி, இலவச சட்ட ஆணைக்குழுவின் மட்டக்களப்பு நிலையத்தின் பொறுப்பாளர்களான  சட்டத்தரணிகள் மிருதினி சிறிஸ்குமார் மற்றும்  காமலிடா சசிரூபன்  விளக்கமளித்தனர்.

அரச உத்தியோகத்தில் இல்லாத மாதாந்தம் 15,000 ரூபாய்;க்கும் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களும் இலவச சட்ட ஆலோசனைகளை பெற உரிமையுடையவர்கள் என சட்டத்தரணி மிருதினி சிறிஸ்குமார்  தெரிவித்தார்.

மேலும் பாரபட்சம் காட்டப்படாதிருப்பதற்கான உரிமை, பெண்களை சோதனை செய்தல், பெண்களைத் தடுத்து வைத்தல், இருதாரமணம், 18 வயதுக்குட்பட்ட திருமணம், விவாகரத்து, பாலியல் தொல்லைகள் உள்ளிட்டவை தொடர்பில் சைகை முறையில் விளக்கமளிக்கப்பட்டன.

இவர்களால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் அவர்களுக்குரிய  சைகை முறையில் விளக்கத்துடன் விடையளிக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X