2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


போரதீவுப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட 27 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் தலா சங்கத்துக்கு 100,000 ரூபாய் படி நிதியுதவி  இன்று செவ்வாய்க்கிழமை (14) வழங்கப்பட்டன.

அத்துடன், 'வாழ்வின் எழுச்சி' திட்டத்தின் கீழ் இப்பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 11 மட்பாண்ட தொழிலாளர்களுக்கும் மட்பாண்டம் செய்யும் காற்சக்கர இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

தலா பயனாளிக்கு 30,000 ரூபாய் பெறுமதியில் 11 பயனாளிகளுக்கும் 330,000 பெறுமதியான மட்பாண்டம் செய்யும் காற்சக்கர இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மேலும்,  7 மீனவர்களுக்கும் 7  தோணிகள் வழங்கப்பட்டன

தலா பயனாளிக்கு 30,000 ரூபாய் பெறுமதியில் மொத்தமாக 210,000 ரூபாய் பெறுமதியில் தோணிகள் வழங்கப்பட்டதாக போரதீவுப்பற்று பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தயோகஸ்தர் கே.உதயகுமார் கூறினார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் அப்பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், போரதீவுப்பற்று பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கே.கணேசமூர்த்தி, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கே.உதயகுமார், மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X