2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நீர் விநியோகிக்கும் பவுசர் கையளிப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு இன்று (14) நீர் விநியோகிக்கும் பவுசர் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த நீர் விநியோகிக்கும் பவுசரை, ஓட்டமாவடி பிரதேச சபையின் தலைவர் கே.பி.எஸ்.ஹமீட்டுக்கு கையளித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால், 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த நீர் விநியோகிக்கும் பவுசர் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை வெல்லாவெளி பிரதேச சபை மற்றும் பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, ஓட்டமாவடி ஆகிய ஐந்து பிரதேச சபைகளுக்கு, இந்த நீர் விநியோகிக்கும் பவுசர்கள் வழங்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

இந்த நீர் விநியோகிக்கும் பவுசருடன், டிரக்டர் இயந்திரம், நீர் பம்பி என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வைபவத்தில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X