2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கரையாக்கன்தீவு கிராம மக்களுடன் யோகேஸ்வரன் எம்.பி. சந்திப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரையாக்கன்தீவு கிராமத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பின்போது, தங்களது பிரச்சினைகளை கரையாக்கன்தீவு கிராம மக்கள் எடுத்துக்கூறினர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இக்கிராமத்தில்; 90 சதவீதமான மீனவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படாமை. 

இன்றுவரை வீடுகளின்றி மிகுந்த கஷ்டத்துடன் காலங்கழிக்கும் குடும்பங்களுக்கு இந்திய உதவி வீடுகள் உட்பட எதுவித வீடமைப்பு உதவிகளும் வழங்கப்படாமை தொடர்;பில் இக்கிராம மக்கள் எடுத்துக்கூறினர்.

இதன்போது விதவைகள் மற்றும் யுத்தத்தால் அங்கவீனமானவர்கள் மேற்கொள்ளும் சுயதொழில்களுக்கு உதவியளிக்குமாறும் இம்மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கோடை காலத்தில் குடிநீரின்றி கஷ்டப்படுவதுடன், குளத்தினுள் கட்டப்பட்டுள்ள ஒரு கிணறு கூட  அழுக்கான நீரைக் கொண்டுள்ளது.  எனவே, உன்னிச்சையிலிருந்து விநியோகிக்கப்படும் குழாய்நீரை பெற்றுத்தருமாறும் இவர்கள்  வேண்டுகோள் விடுத்தனர். 

படித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி உள்ளதால் தங்களுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுத்தர ஆவண செய்யுமாறு இளைஞர், யுவதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

கர்ப்பிணிகள் கிளினிக்குக்காக  நீண்டதூரமுள்ள கன்னங்குடாவுக்கு  செல்லவேண்டியுள்ளது. இதனால், தங்கள் கிராமத்துக்கு வந்து கர்ப்பிணிமார்களுக்கான பணியை மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறும் இவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பாலர் பாடசாலைகளுக்கன உதவி, விவசாய நடவடிக்கைகளுக்கான உதவி என்பனவற்றுக்கும் இம்மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். 
மேலும், திறமை மிக்க இக்கிராமத்து இளைஞர்கள் யுத்த காலத்துக்கு முன்னர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டி  பெற்றுக்கொண்ட  வெற்றிக்கேடயங்கள் இராணுவத்தால் உடைக்;கப்பட்டதாகவும் அதன் பின் இளைஞர் கழகம் மூலமும் விளையாட்டுக்கழகம் மூலமும் பெற்ற இவ்வெற்றிக் கேடயங்களை பாதுகாக்க இடமின்றி இருப்பதையும்  இம்மக்கள் எடுத்துக் கூறினர்.

தங்கள் வசமுள்ள வெற்றிக்கிண்ணங்களையும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு காட்டினர்.

இவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், கிராம மக்கள் முன்மொழிந்த தேவைகளையும் பிரச்சினைகளையும் இயன்றவரையில் தீர்த்துவைப்பதற்கு  நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது கிழக்கு இந்து ஒன்றிய செயலாளர் கதிர் பாரதிதாசன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இணைப்பாளர் சிவஸ்ரீ.சா.ராமதாஸ் குருக்கள், பேரவையின் அலுவலகர் கே.சஜீவன், சேர்ந்த கிராமத்துப் பெரியவர் என்.ரவிச்சங்கர் உட்பட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X