2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

குடும்ப உறவு தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


குடும்ப உறவு தொடர்பான செயலமர்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

கணவன், மனைவி ஆகிய இருவரிடமும் புரிந்துணர்வு அவசியம். அப்போதே சிறந்த குடும்ப வாழ்வை ஏற்படுத்த முடியும் என்று கலாசார உத்தியோகஸ்தர் அஸ்ஸெய்க் எம்.நழீம் (நழீமி) தெரிவித்தார்.

இன்று கணவன், மனைவி ஆகியோருக்கு இடையில் பிரச்சினைகள் வருவதற்கு புரிந்துணர்வின்மையும் ஒரு காரணம். இருவருக்கும் இடையில் விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, ஒருவரை ஒருவர் நேசிக்கும் தன்மை அவசியம் எனவும் அவர் கூறினார். 

இந்தச் செயலமர்வில் காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மௌலவி ஏ.ஆர்.ஜெஸ்மில் அறிமுக உரை நிகழ்த்தினார்.

இதில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X