2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

குடிநீர் போத்தல்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


வரட்சிப் பாதிப்புக்குள்ளான மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாடசாலைச் சிறார்களுக்கும்  பாலக்காடு நவீன மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கும் குடிநீர் போத்தல்கள் நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பிலுள்ள நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் பங்களிப்பில் இந்தக் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.

மண்முனை மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் நெல்லிக்காடு அ.த.க. பாடசாலை, உன்னிச்சை 06ஆம் கட்டை அ.த.க. பாடசாலை, உன்னிச்சை 08ஆம் கட்டை அ.த.க. பாடசாலை  ஆகியவற்றில்  கல்வி கற்கும் சுமார் 450 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X