2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு. பொலிஸ் நிலைய ஜீப்வண்டி விபத்து

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான பொலிஸ் ஜீப்வண்டி ஒன்று மட்டக்களப்பு வெட்டக்காடு சந்தியில் இன்று வியாழக்கிழமை (16) விபத்துக்கு உள்ளானதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பிரதேசத்திலிருந்து நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜீப்வண்டி மீது  எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த கனரக டிப்பர் வாகனம் மோதியே இந்த விபத்து சம்பவித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில், ஜீப்வண்டியின் இரண்டு  கண்ணாடிகளும்  முற்றாக சேதமடைந்துள்ளன.

விபத்து இடம்பெற்ற இடத்துக்குச் சென்று களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி;.ரட்நாயக்கா, மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.பி.ஹெட்டியாராச்சி உட்பட போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X