2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

குடுமிமலைப் பிரதேச மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


குடுமிமலைப் பிரதேசத்திலுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும்; கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  துரைராஜசிங்கமும்  நேற்று வியாழக்கிழமை கேட்டறிந்துகொண்டனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் செயோனின் தலைமையில் நடைபெற் மக்கள் சந்திப்பில்,   குடுமிமலை சின்னவடமுனை பிரதேசத்தைச்  சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இவர்கள்  மடுவடிப்பிள்ளையார் ஆலயம், குடுமிமலை கண்ணகையம்மன் ஆலயம், வேங்கையடி முருகன் ஆலயம், மிராணகடவை
(சின்னவடமுனை) பேச்சியம்மன் ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று இவற்றின்; குறைபாடுகளையும்  கேட்டறிந்துகொண்டனர்.

மேய்ச்சல் தரைப் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை, நிவாரணத்திட்டங்கள் வழங்கப்படாமை, குளங்கள் புனரமைப்பு, சோளார் பிரச்சினை மற்றும் குடிநீர் குழாய் பிரச்சினை ஆகியவை தொடர்பில் குடுமிமலை பிரதேச மக்கள் இவர்களிடம் எடுத்துக்கூறினர்.

இப்பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கு ஆவண  செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இவர்கள் தெரிவித்தனர்.

மேலும்,  சோளர் பிரச்சினை தொடர்பில் அவ்விடத்திலேயே வாழைச்சேனை பிரதேச சபை செயலாளருடன்; தொடர்புகொண்டு சோளர்களை பழுதுபார்ப்பதற்கு நிதி பெறுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், குடிநீர் குழாய் பிரச்சினை தொடர்பிலும் ஒக்ஸ்பாம் நிறுவனத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X