2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரேரணையை நிறைவேற்றும் தொழிற்சங்க மாநாடு

Gavitha   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழிற் சங்கங்கள் அனைத்தும் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது தொடர்பான பிரேரணையை நிறைவேற்றும் தொழிற்சங்க மாநாடு ஒன்றை எதிர்வரும் சனிக்கிழமை (25) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடாத்தவுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழிற் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அதன் முக்கியஸ்தர்களை இன்று (19) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர் வரும் ஜனாதிபதி தேர்லில், நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும். அவருக்காக மட்டக்களப்பிலுள்ள தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து அவரின் வெற்றிக்காக வேலை செய்ய வேண்டும்.

நமது தொழிற் சங்கங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அடையாளப்படுத்தி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழிற் சங்கங்கள் தமது பிரச்சினைகள் தேவைகளை முன் கூட்டியே எமக்கு முன் வைக்க வேண்டும்.

எதிர்வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழிற் சங்க மாநாட்டுக்கு ஒரு சில அமைச்சர்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழிற்சங்க பிரதிநதிகள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என நான் அழைப்பு விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் உப தலைவர் ஆர்.கமகே மற்றும் மீள் குடியேற்ற பிரதியமைச்சரின் தகவல் தொடர்புக்கான இணைப்புச் செயலாளர் வி.ஜீவானந்தன் உட்பட தொழிற்சங்க பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X