2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின், வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரத்தில், இன்று (20) காலை 5.40 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

விவேகானந்தபுரம் கிராம வாசியான ராஜதுரை மோகனதாஸ் (வயது 32) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு காட்டு யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

இவர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருநப்பதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காலைக் கடன்களை முடிப்பதற்காக, இவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த காட்டுப்பக்கம் சென்றுள்ளார். இதன்போது காட்டுக்குள் நின்றிருந்த யானை மூர்க்கமாகத் இவரை தாக்கியுள்ளது.

இதன்போது நபருடைய இடது கால் முறிந்துள்ளதோடு, தலையிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் மயக்கமடைந்திருப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X