2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இடமாற்றத்தை கண்டித்து கிழக்கு மாகாண பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்


கிழக்கு மாகாணத்திலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமை (21) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரை தாபனக்கோவைக்கு முரணான வகையில், மட்டக்களப்பிலிருந்து கல்முனைக்கு இடமாற்றியதைக் கண்டித்தும் அவரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண பொதுச்சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை (20)  ஆரம்பமான இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில்,  172 பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  ஈடுபட்டுள்ளனர்.

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அலுவலகங்களுக்கு சென்று கையொப்பமிட்டபோதிலும், வேலை தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X