2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலையின் புதிய துணைவேந்தராக கிட்ணன் கோபிந்தராஜா தெரிவு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற பேரவை வாக்கெடுப்பில், கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவு செய்யப்பட்டார்.

உபவேந்தரை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பு கிழக்கு பல்கலைகழக சபா மண்டபத்தில் செவ்வாய்கிழமை (21) நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான உபவேந்தர் நியமனத்திற்காக தகுதியு உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் ஒன்று கூடிய பேரவை உறுப்பினர்களின் முன்னிலையில்  இத்தெரிவு இடம்பெற்றது.

நடைபெற்ற உபவேந்தர் தெரிவின்போது அதிகப்படியான 15 விருப்பு வாக்குளைப் பெற்று கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

கிழக்குப் பல்கலைக்கழக அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் 10 வாக்குகளையும், கலாநிதி எம்.எம்.மௌசூன் 10 வாக்குகளையும் பெற்று இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டனர்.

தகுதியுடைய 9 பேர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில் இறுதிக்கட்டத்தில் இரண்டு விண்ணப்பதாரிகள் விலகியிருந்தனர்.

பேரவையினால் வாக்குகளின் அப்படையில தெரிவுசெய்யப்பட்ட முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு இறுதியாக ஜனாதிபதியினால் அடுத்த மூன்றாண்டு கால பதவிக்கான உபவேந்தர் தெரிவுசெய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X