2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யுவதியின் தங்கச்சங்கலி பறிப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் யுவதியொருவரின்  தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதுடன் அவர் அணிந்திருந்த  தாவணியை பறித்து மோட்டார்  சைக்கிளின் இலக்கத்தகடை மூடி தப்பிச்சென்றதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை(22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மைலம்பாவெளி - விபுலாநந்தபுரத்தில் வசிக்கும் நடராஜா வேணுஜா (வயது 23) யுவதியின் தங்கச் சங்கிலியே இவ்வாறு பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மைலம்பாவெளியிலுள்ள தனது வீட்டிலிருந்து விபுலாநந்தபுர உள்வீதியால் நடந்து வந்து கொண்டிருக்கும்போது எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் தனது கழுத்திலிருந்த ஒன்றேகால் பவுண் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக   அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X