2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கொள்ளையிடப்பட்ட நகைகள் மீட்பு: இருவர் கைது

Kogilavani   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்தில் வீடொன்றில்  கடந்த வாரம் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவரை காத்தான்குடி பொலிசார், நேற்று   கைது செய்துள்ளதுடன் குறித்த வீட்டில் கொள்ளையிடப்பட்ட பொருட்களையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுரத் ஹக்மன பண்டார மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர ஆகியோரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க தலைமையில் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எம்.என்.றஹீம், மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.உபாலி, பொலிஸ் அதிகாரிகளான எஸ்.எஸ்.ஜே.இகலசகம, கே.ஜெயசிங்க, எஸ்.பத்மநாதன், ஏ.ராபின் ஆகியோர் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான துரித விசாரணையை நடாத்தி வந்ததுடன் குறித்த சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 46 பவுண் நகை மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், மினி கணினி இயந்திரம் உட்பட அனைத்துப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மட்டக்களப்பு பூம்புகாரைச் சேர்ந்த டிசந்தூரன் சுதர்சன், மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்த சிவசுந்தரம் விஜேந்திரன் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நகைகளையும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிசார் பார்வையிட்டனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் நகைகள் என்பவற்றை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர்.

நாவற்குடா அம்பாள் வீதியைச்சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொலன்னறுவை நிறைவேற்று பொறியியலாளரான வி.சுரேஸ்குமார் என்பவரின் வீட்டிலேயே இக்கொள்ளைச்சம்பவம் 15.10.2014 அன்று  இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X