2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இலஞ்ச விவகாரம்: பொலிஸார் இருவர் இடை நிறுத்தம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 23 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் இருவர், 300 ரூபாய் இலஞ்சம் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்  தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மோட்டார் சைக்கிளில் சிறு தவறு ஒன்றிருப்பதாகக் கூறியே தன்னிடம், குறித்த பொலிஸார் இருவரும் 300 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக வாழைச்சேனையைச் சேர்ந்த ஆர். ஜெயராஜ் என்பவர் களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறையிட்டிருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலே நேற்று புதன்கிழமை (22) குறித்த மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் இருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X