2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

திரைப்படக் காட்சியும் கலந்துரையாடலும் நிகழ்வு

Thipaan   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி. யுதாஜித்

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை நிகழ்த்தும் மாதாந்த திரைப்படக் காட்சியும் கலந்துரையாடலும் மட்டக்களப்பு புதிய கல்முனை வீதியிலுள்ள சௌக்கிய பராமரிப்பு பீட மண்டபத்தில் இன்று(24) நடைபெறுகிறது.

இதில், காலை 9 மணிக்கு பிரபல இயக்குனராக சித்திக் பர்மாக்கின் ஒசாமா (‘OSAMA’  ) மற்றும் 11 மணிக்கு தோமஸ் வாற்மனின் பிற்வீன் த லைன்ஸ் ('‘Between the Lines’) ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டதாக ஏற்பாட்டாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.

 ‘OSAMA’


கணவரை இழந்த தாதியான தன் அம்மாவால், பையனாக மாறுவேடம் ஏற்கச் செய்யப்பட்ட 12 வயது நிரம்பிய ஒரு சிறுமியின் கதையே ஒஸாமா.
தனது அம்மாவுக்;கும் பாட்டிக்கும் உணவளிப்பதற்காக உழைப்பதன் பொருட்டு ஏற்கப்பட்ட இம் மாறுவேடத்தில் சிறுமியால் 2 நாட்களே வெற்றிகரமாக செயற்பட முடிந்தது.

உள்ளூர் தலிபான் ஆண்கள் பாடசாலைக்குச் சென்றபோது தன்னுடைய நிலைமை எவ்வளவு பயங்கரமானதும் கொடூரமானதும் என்பதை அச்சிறுமி உணர்கிறாள்.
இனிமேல் வாழ்வதற்கு ஒன்றுமில்லை: அவளது (அச்சிறுமியினது) எதிர்காலம் எவ்வளவு வெறுமையானது என்பதை உணர்த்தும் பயங்கரமான காட்சியுடன் இத்திரைப்படம் நிறைவுபெறுகிறது.

தலிபான் ஆட்சியில் பெண்களின் வாழ்க்கை எவ்வளவு கொடூரமானதும் பயங்கரமானதும் என்பதை உண்மை நிகழ்வுகளின் மூலம் நிகழ்த்தும் இத்திரைப்படம் 1996இல் தலிபான்களின் எழுச்சிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் முதன்முதலாகவும் முழுமையாகவும் தயாரிக்கப்பட்ட படமாகவும் விளங்குகிறது. 
 
‘Between the Lines’



இந்தியாவில் சமூகங்களின் பெரும்பகுதியினரால் நிராகரிக்கப்பட்ட ஒரு பிரிவினராக வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்றாம் பாலினமாக விளங்கும் திருநங்கையர்களின் பதிவாக அமையும் ‘Between the Lines’ திரைப்படத்தில், திருநங்கையர்களின் வாழ்வு, இத் திரைப்படத்தின் புகைப்படக் கலைஞரின் திறமையினூடாக தத்ரூபமாகக் காட்டப்பட்டுள்ளது.

திருநங்கையர்களின் இருப்பும் உரிமைகளும் அவர்களுக்கான சமூக அந்தஸ்தும் உத்தியோக பூர்வமாக ஏற்கப்படாத நிலையில் அவர்களது வாழ்வு கருத்திலெடுக்கப்படாத ஒன்றாகவே இருந்துவருகிறது.

உயிர் உற்பத்தியை மேற்கொள்ளத்தக்கதாய் பொருத்தமான நிலையில் பாலியல் உறுப்புக்களைக் கொண்டிராத போதும் உயிர் உற்பத்திக்கான உந்துதல்களை வழங்கத்தக்க ஆற்றல்களையும் அடிப்படை உணர்ச்சிகளையும் கொண்டவராக மூன்றாவது பாலினமான திருநங்கையர் விளங்குகின்றனர்.

இவர்களது இவ்வாற்றல்கள், தகுதிகள் மற்றும் உணர்ச்சிகள் தொடர்பான நிலைப்பாடுகள் இந்து சமயத்தின் சித்தாந்தத்தின் பாற்பட்டதாய் அமைவதும் குறிப்பிடப்படுகிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X