2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


வென்றெடுத்த சுதந்திரத்தைப் பாதுகாப்போம், எமது உரிமைகளைக் காத்திடுவோம் எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து  மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (25) கூட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு தொழிற்; சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இக் கூட்டத்தில், இன மத பிரதேச வேறுபாடுகள் இன்றி செயற்பட்டு வரும் ஜனாதிபதியை எல்லோரும் ஆதரிப்பது எமது கடமையாகும் என, நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் தெரிவித்தார்.

சகலருக்கும் நன்மை பயக்கும் வரவு- செலவுத் திட்டத்தை தயாரித்தமையானது, அவர் எல்லோரிடமும் கொண்டுள்ள கருசினையைக் காட்டுகின்றது என அமைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம செயலாளர் லெஸ்லி தேவேந்திரா, ஜனாதிபதியின் தொழில் சங்க இணைப்புச் செயலாளர் என்.வி. கல்கட்டி, அரச கூட்டுத்தாபன தனியார் வியாபாரிகள் சங்க செயலாளர் றஞ்சித் ஹெட்டியாராட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர புகையிரத ஊழியர் சங்க பிரதம செயலாளர் நதிரா மனோச்,  மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம். ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X