2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

Thipaan   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


கிழக்கு மாகாண இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற கட்டடத் தொகுதியில் வியாழக்கிழமை (23) நடைபெற்றது.

ஹிந்து சேவா சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சுதர்சனனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜாவும் செயலாளராக சிவம் பாக்கியநாதனும் பொருளாளராக எஸ்.கமலேஸ்வரனும் உபதலைவராக எஸ்.சுதர்சனனும் உப செயலாளர் செ.துஷியந்தனும் ஆலோசகராக மட்டக்களப்பு மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் பிரசார செயலாளர் கே.தியாகராஜாவும் தெரிவு செய்யப்பட்டதுடன் செயற்குழு உறுப்பினர்களும் 13 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அடுத்த ஒன்று கூடல் எதிர் வரும் 02.11.2014 அன்று மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உபதலைவர் எஸ்.சுதர்சனன் கூறினார்.

இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து இந்து ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறும் அக்கூட்டத்தில் முக்கிய சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X