2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'மட்டக்களப்பு மாவட்டத்தை கட்டியெழுப்பிய ஜனாதிபதி மஹிந்தவுக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும்'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த காலத்தில் சீரழிந்துபோயிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தை கட்டியெழுப்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (25) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கடந்த கால யுத்தத்தினால் எமது மட்டக்களப்பு மாவட்டம் சீரழிந்து காணப்பட்டது. ஆனால், இன்று இந்த மாவட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல துறைகளிலும் எமது மாவட்டம் முன்னேறியுள்ளது. இதற்காக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நாம் ஆதரிக்க வேண்டும். எமது அமோக ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வழங்கவேண்டும்.

இனம், மதம், மொழி பாராது ஜனாதிபதி; இந்த நாட்டை அபிவிருத்தி செய்து நாடு இன்று வளர்ச்சிப்பாதைக்கு சென்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.

இந்தக் கூட்டத்தில் இலங்கை சுதந்திர தொழிற்சங்கத்தின் பிரதம செயலாளர் வெஸ்லி தெய்வேந்திரா, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் என்.பி.கல்பிட்டிய, அரச மற்றும் தனியார் கூட்டுத்தாபனங்கள் ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சித் ஹெட்டியராய்;ச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X