2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

இதுவரையில் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமையால் மீனவத்தொழிலாளிகள் பாரிய சிரமத்தை  எதிர்நோக்குவதாகவும்   தங்களது தேவைகளை நிறைவேற்றித் தருமாறும்  மட்டக்களப்பு களுதாவளை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் செல்லையா இராமலிங்கம் கோரிக்கை  விடுத்துள்ளார்.

இது தொடர்பில்  இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

'களுதாவளை கிராமத்தில் 175 குடும்பங்கள்  மீன்பிடியை  முழுநேர ஜீவனோபாயத் தொழிலாக மேற்கொண்டுள்ளன.  இந்தத் தொழிலை சிறப்பாகவும் விருப்புடனும் மேற்கொள்வதற்கு அடிப்படை வசதிகளான வீதி சீரின்மை, மின்சாரம் இல்லாமை உள்ளிட்டவை  தடையாகவுள்ளன.
களுதாவளை கடற்கரைக்குச் செல்லும் சுமார் 200 மீற்றர் நீளமான  பிரதான வீதியானது குன்றும் குழியுமாக உள்ளது. கடந்த சுனாமியால்  இந்த வீதி மிகவும் சேதமடைந்துள்ளது.  இதனால், மீன்களைப் பிடித்து சிறந்த விலைக்கு விற்க முடியாதுள்ளது.  காரணம் இந்த வீதியால்; மீன்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வரமுடியாதுள்ளது.

களுதாவளை கடற்கரையிலிருந்து மீன்களை வீதிக்கு கொண்டுவருவதற்கு அதிகளவு பணத்தை வழங்கி, மீன்களை காவிச் சென்று மீன்களை ஏற்றும் வாகனங்கள் தரித்து நிற்கும் இடத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது. இதனால், எம்மிடம் வருகின்ற மீன் வியாபாரிகள் நாம் கஷ்டப்பட்டு பிடித்த மீன்களை குறைவான விலைக்கே பெற்றுக்கொள்கின்றார்கள்.

இதனால், ஒவ்வொரு நாளும் எமது மனித உழைப்பில் நஷ்டம் ஏற்படுவதுடன், இந்தத்தொழிலில் வெறுப்பும் எமது மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதை விட, எமது கடற்கரை பிரதேசத்தில் மின்சார வசதி இல்லை.  இரவு வேளைகளில் கடற்றொழிலுக்கு செல்கின்றவர்கள் பல இடைஞ்சல்களை எதிர்நோக்குகின்றனர்.

வெளிச்சமின்மையால் இரவு வேளைகளில் கரைவலை மீன்களை இனங்காண முடியாதுள்ளதால், இரவு வேளை கடற்றொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது.  ஆழ்கடல் மீன்பிடியாளர்ளும்; கரை வருவதற்கு சிரமப்படுகின்றனர்.

இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியில் இந்ததத தொழிலை  நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். தேவை அறிந்து சேவையாற்ற யார் முன்வருவார்கள் என்ற அங்கலாய்ப்புடன் இருக்கின்றோம்.  இவை தொடர்பில் தேர்தல் காலங்களில் வரும் அரசியல்வாதிகளிடம் முன்வைத்தோம். எவரும் நிறைவேற்றி தருவதாக இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X