2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'நலன், இன நல்லுறவில் கூடிய அக்கறையுடைய ஜனாதிபதி வேட்பாளரையே அ.இ.ம.கா. ஆதரிக்கும்'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாட்டின் நலனிலும் இன நல்லுறவிலும் கூடிய அக்கறை கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரிக்குமென கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள 40 குடும்பங்களுக்கு குடிநீரைப் பெறுவதற்கான காசோலைகள் ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலய கேட்போர் கூடத்தில்  நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'எதிர்காலம் எம் நாட்டில் தேர்தல் காலமாக இருக்கப்போவதை யாவரும் அறிந்திருப்பீர்கள். இதனால், யார்,யார் எந்த வேட்பாளரை ஆதரிக்கப்போகிறார்கள் என்ற அங்கலாய்ப்பில் நீங்கள் எல்லாம் இருப்பீர்கள். பொறுமையாக இருங்கள்.

எங்களது அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது யாரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை. ஆனால், நாட்டின் நலனிலும் இன நல்லுறவிலும் கூடிய அக்கறை கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே எங்கள் கட்சியும் தலைமையும் ஆதரிக்கும்.

மேலும், கல்குடாப் பிரதேசத்தில் அமைந்துள்ள அல்- கிம்மா நிறுவனம் நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட சமூகப்பணிகளை செய்து வருகின்றது  ஏறாவூர் சுபைர் ஹாஜியார் பவுண்டேசனுடன் இணைந்து முதற்கட்டமாக ஏறாவூரில்  40 பயனாளிகளுக்கு குடிநீரைப்  பெற்றுக்கொடுப்பதில் கல்குடா அல் கிம்மா நிறுவனம் முன்னின்றமைக்கு நன்றி கூறுகிறேன். அல் கிம்மா  நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளை எதிர்காலத்தில் சுபைர் ஹாஜியார் பவுண்டேசன் மூலமாக ஏறாவூர் மக்களுக்கு கிடைக்கச்செய்வதற்கு  உதவ வேண்டும்' என்றார்.

இந்த நிகழ்வில் அல்கிம்மா நிறுவனப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர், செயலாளர் எம்.ஐ.றிஸ்வின் பிரதேச  மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் உட்பட  பல முக்கியஸ்தர்கள்; கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X