2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'இன வன்முறைச்சூழல் சமூகங்களை சந்தேகத்துடன் பார்க்கவைத்தது'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த காலத்தில் நிலவிய இன வன்முறைச்சூழல் சமூகங்களை சந்தேகத்துடன் பார்க்கவைத்தது. தற்போது அந்நிலை படிப்படியாக மாறி வருவதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள்; சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.சுபைர் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினுடைய நல்லிணக்கக்குழுவின் ஏற்பாட்டில்,  ஹஜ் பெருநாள் மற்றும் தீபாவளி ஒன்றுகூடல் அஷ்ஷஹீத் அகமட்லெவ்வை மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்த சூழ்நிலையும் சமூகங்களை பிரித்துவைத்திருந்தது. தற்போது இந்நிலையும் மாறி, சமூகங்கள் பழையவாறு ஒற்றுமையை கட்டியெழுப்பி வருகின்றன.

எமது பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை  முக்கியமானதாகும். இந்த இரண்டு சமூகங்களும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு தங்களுக்குள்; இருக்கின்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து வாழவேண்டும்.

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையை பிட்டும் தேங்காய்ப்பூவுக்கும் ஒப்பிடுவார்கள்.  பிட்டும் தேங்காய்ப்பூவும் ஒன்றுடனொன்று கலந்து எவ்வாறு உள்ளதோ, அவ்வாறே இப்பிராந்தியத்திலுள்ள  தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையாகும்.

ஒற்றுமையை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் நல்லிணக்கக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் சுதந்திரமாக செயற்படும் நிறுவனமாகும்' என்றார்.
இந்த ஒன்றுகூடலில்  அருட்தந்தை ஆர்.றஜீவன் அடிகளார், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர்; சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X