2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'பால்நிலை பாரபட்சத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கை' செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'பால்நிலை பாரபட்சத்தில் சிவில் சமூகம் எடுக்கவேண்டிய நடவடிக்கை' எனும் தலைப்பில் செயலமர்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது.

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையுடன் கிராமிய அபிவிருத்தித் திட்டமிடல் அமைப்பால் நடத்தப்பட்ட இச்செயலமர்வில் கிராம மட்டத்திலுள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர், யுவதிகள் என சுமார் 50  பேர் கலந்துகொண்டனர்.

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாகப் பணிப்பாளர்  சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் சட்டத்தரணி  சசிரேகா கனகராஜ் விரிவுரைகளை நடத்தினார். அத்துடன், கிராமிய அபிவிருத்தித் திட்டமிடல் அமைப்பின் நிர்வாக முகாமையாளர் வி.ரமேஸ் ஆனந்தன் உட்பட அதன் அதிகாரிகளும் இதில்  கலந்துகொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன், 'பெண்களுக்கு எதிராக நடக்கும் பாரபட்சங்களுக்கு  சட்டத்;தினூடாக நியாம் தேடுவதற்கு பெண்கள் தயங்குகின்றனர். அவ்வாறில்லாமல், பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் மற்றும் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்த விடயங்களை சட்டத்தின் முன் கொண்டுவரவேண்டும்' எனக் கூறினார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X