2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிளாத்தி மீன்கள் கரையொதுங்கின

Gavitha   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில், கிளாத்தி இனத்தைச் சேர்ந்த மீன்கள் இறந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (27) கரையொதுங்கியுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோஜ் தெரிவித்தார்.

கரையோர கற்பாறைகள் உள்ளிட்டவைகளில் காலநிலை மாற்றத்தினால், ஒட்சிசன் குறைவடைவதன் காரணமாக, நீரில் ஏற்படும் குளிர்ச்சியினால் மீன்கள் இறப்பதாக நாரா நிறுவனம் தெரிவித்ததாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோhஜ் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இவ்வாறு இடம்பெற்றதாகவும் இதனால் கடல் மற்றும் வாவி உணவுகளை உண்பதால், எந்தப் பாதிப்பும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேபோன்று ஞாயிற்றுக்கிழமை (26) கல்லடி காத்தான்குடி கடற்கரைகளில் சிவப்பு நண்டுகள் மற்றும் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X