2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தபால் சேவை வான் தீப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு பிரதம தபால் திணைக்களத்துக்குச் சொந்தமான அதிவேக தபால் சேவையில் ஈடுபடுகின்ற  வான் ஒன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு (27) தீப்பற்றியதாக   மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வான் கதிரவெளி முதல் பாணமைவரை அதிவேக தபால் சேவையில் ஈடுபட்டுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

வழமைபோன்று நேற்றையதினமும் (27) சேவையில் ஈடுபட்ட பின்னர் நிறுத்திவைக்கப்பட்ட இந்த வானின் மின்கலத்தில்; தீப்பற்றியதால், வானிலும்; தீ பரவியது.   இந்த நிலையில் தீயை அணைத்ததாக மட்டக்களப்பு தபால் நிலைய கடமைநேர தபால் அதிபர் வி.தயாபரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X