2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மிளகாய் இலைச் சுருளலை கட்டுப்படுத்தல் தொடர்பில் விளக்கமளிப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மிளகாய் செடிகளின் இலைகளில் ஏற்படும் சுருளலை கட்டுப்படுத்தி அதிக விளைச்சலை பெற்றுக்கொடுக்கும் வகையில், இயற்கை கிருமிநாசனிகளை  தயாரிப்பது தொடர்பில்  தொழில்நுட்ப விளக்கத்துடனான  ஒன்றுகூடல்  செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கோப்பாவெளியில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்றது.

மிளகாய் செடிகளில் ஏற்படும்; தாக்கம், இதை இயற்கை முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துதல், பாவனையிலுள்ள நஞ்சுமருந்துகளால் மண்வளம் குறைவடைதல், நீரில் நஞ்சு கலப்பு போன்றவற்றால் ஏற்படும் தொற்றாநோய்கள் தொடர்பிலும் நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்வதற்கு இயற்கையிலுள்ள பசளைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸ் விளக்கமளித்தார்.

இயற்கை பசளைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு கிருமிநாசனிகளை தயாரிப்பது தொடர்பிலும்  விவசாய போதானாசிரியர்கள் விளக்கமளித்தனர்.

பிரதேச விவசாய போதானாசிரியர் ரி.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன், மத்தி வலய உதவி விவசாயப் பணிப்பாளர் மங்கை சிவஞானம், பாடவிதான விரிவுரையாளர் ராஜாம்பிகை கருணாகரன், செங்கலடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர், விவசாய போதானாசிரியர்களான கே.லிங்கேஸ்வரன், ஏ.டபிள்யூ.எம்.சிபான் பிரதேச விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X