2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பதுளை அனர்த்தத்துக்கு ஹக்கீம் அனுதாபம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 29 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கையில் 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்துக்கு பின்னர் ஏற்பட்ட பாரிய மனித அவலமாக இன்று (29) பதுளையில் இடம் பெற்றுள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ஸிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பதுளை மாவட்டத்தில் மீரியாபெத்த, கொஸ்லந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் ஏராளமானோர் புதையுண்டும் காணாமலும் போயுள்ளதை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன். தோட்டப்புற மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிகின்றேன்.

இலங்கையில் 2004ஆம் ஆண்டில் நிகழ்ந்த கோர சுனாமி அனர்த்தத்தின் பின்னர் ஏற்பட்ட பாரிய மனித அவலமாக இந்தச் சம்பவத்தைக் கருதலாம்.

இந்த மண்சரிவில் சிக்கி காயமடைந்தோர் சுகமடைய பிரார்த்திப்பதோடு, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X