2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அனுபவப்பகிர்வு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின்; கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிறுவர்களின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பை  மேம்படுத்தும் வகையில்,  கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்திலிருந்து வாகரை வடக்கு கிராமத்துக்கான கள விஜயம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரத்தின்  வழிகாட்டலுடன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர் எம்.கே.றுசைட்டின் தலைமையில் நடைபெற்ற  இக்கள விஜயத்தில்  கோறளைப்பற்று தெற்கு, மற்றும் வாகரை வடக்கு பிரதேசங்களைச் சேர்ந்த கிராம மட்ட சிறுவர் உரிமை கண்காணிப்புக்குழுக்களும்; இணைந்தன.

இதன்போது, இரு கிராமமட்ட சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுக்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்ததுடன், இக்குழுக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் மற்றும் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X