2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

குருக்கள்மடம் புதைகுழி தோண்டுவது தொடர்பான வழக்கு நவம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குருக்கள்மடம் புதைகுழி தோண்டுவது தொடர்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் கடந்த மாதம் 2ஆம் திகதி  களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நகர்வு மனு தொடர்பான வழக்கு, நேற்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான்  ஏ.எம்.றியாழ் முன்னிலையில் மீண்டும் எடுக்கப்பட்டது. இதன்போதே,  நவம்பர் 13ஆம் திகதிக்கு  நீதவான் வழக்கை ஒத்திவைத்தார்.

நவம்பர்  13ஆம் திகதி, இந்த புதைகுழியை தோண்டுவதற்கான ஏற்பாடுகள் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு நீதவான் றியாழ் இதன்போது உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 2ஆம் திகதி நடைபெற்ற இந்த நகர்வு மனு தொடர்பான விசாரணையின்போது, 30.10.2014 இடையில் இந்த புதைகுழி தோண்டுவதிலுள்ள தாமதம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு நீதவான்  றியாழ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி களுவாஞ்சிக்குடி பொலிஸார் இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கையை பரிசீலித்த நீதவான்,  'அடுத்த மாதம் 24ஆம் திகதி இந்த புதைகுழியை தோண்டுவதற்கான ஏற்பாடுகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொள்ள வேண்டுமென ஏற்கெனவே உத்தரவிடப்பட்டதற்கிணங்க அடுத்த மாதம் (நவம்பர்) 13ஆம் திகதி இந்த புதைகுழியை தோண்டுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கான ஒழுங்குகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு நீதவான்  றியாழ் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

1990ஆம் ஆண்டு காத்தான்குடியைச் சேர்ந்த சிலர் கல்முனையிலிருந்து காத்தான்குடிக்கு சென்றுகொண்டிருந்தபோது குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி கொலை செய்யப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளவர்களின் சடலங்களை தோண்டுமாறு கோரி களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X