2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, ஏறாவூரில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள தெரிவுசெய்யப்பட்ட 4 குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்; கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி  கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஏறாவூர் அரபா மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது ஏறாவூர் பாத்திமா  ஆரம்பப் பாடசாலைக்கு மேசை, கதிரை உள்ளிட்ட தளபாடங்களும் ஏறாவூர் பிரதேசத்திலிருந்து கடந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 75 மாணவர்களுக்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்த உதவிகள் அனைத்தும் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டதாக மேற்படி அமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X