2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பள்ளிவாயலில் கொள்ளையிட்ட மூவர் கைது

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள சிகரம் ஜும்மாப் பள்ளிவாயலில், கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் மூவர் வெள்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள சிகரம் ஜும்மாப் பள்ளிவாயலுக்குள் இருந்த 57,000 ரூபாய் பெறுமதியான ஜெனரேட்டர் மற்றும் பள்ளிவாயலுக்குள் பொருத்தப்பட்டிருந்த மணிக்கூடு என்பன வெள்ளிக்கிழமை (31) அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பள்ளிவாயல் தலைவர் எம்.வை.ஆதம் தலைமையிலான நிருவாகத்தினர், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள், காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரையும்; கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X