2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மீரியபெத்த மக்களுக்காக, மட்டக்களப்பில் நிவாரணம் சேகரிப்பு

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் , எம்.எஸ்.எம்.நூர்தீன்,மாணிக்கப்போடி சசிகுமார்

கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிசெய்யும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை (31) காலை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதனை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிவில் சமூக பிரதிநதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிவாரணம் சேகரிப்பு பணி ஞாயிற்றுக்கிழமை (02) முடிவடையவுள்ளது. இந்நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

அப்பணியால் சேகரிக்கப்படும் நிவாரணப்பொருட்கள்; ஞாயிற்றுக்கிழமை (02) மாலை பதுளை கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதிக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X