2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இளைஞர் விருதுப்போட்டி

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விருதுப் போட்டி இன்று (01) காலை முதல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில், உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் தலைமையில் இடம்பெற்றது.

தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான போட்டிகள் இடம்பெற்ற நிலையில், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்ட இப் போட்டியில், அறிவிப்பு, பேச்சு, இளம் பாடகர், நாட்டார் பாடல், கிராமிய நடனம், பரதநாட்டியம், அபிநய நடிப்பு எனப் பல்வேறு போட்டிகள் இடம்பெற்றது.

இப்போட்டியின் ஆரம்ப விழாவில் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி ஜே.கலாராணி, திருமதி அ.நிசாந்தி மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X