2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

முனைப்பு நிறுவனத்தினால் நிவாரண பொருட்கள் கையளிப்பு

Gavitha   / 2014 நவம்பர் 02 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

சுவிஸ்லாந்து நாட்டை தளமாக கொண்டு இயங்கி வரும் முனைப்பு நிறுவனம், அனர்த்த நேர உதவித்திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து சனிக்கிழமை (01) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கைகயளித்தனர்.

இதன்போது 150 குடும்பங்களுக்கு தேவையான உலர்வுணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டன.

முனைப்பு அமைப்பின் சார்பில் செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் கு.அருணாசலம், ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் பா.இன்பராஜா ஆகியோர் பொருட்களை கையளித்தனர்.

இதன்போது, மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன்,  உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X