2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இஸ்லாமிய வர்த்தகர் நலன்புரி அமைப்பால் நிவாரணப்பொருட்கள்

Gavitha   / 2014 நவம்பர் 02 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பதுளை கொஸ்லாந்தயில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர் நலன்புரி அமைப்பு சனிக்கிழமை (01) மாலை நிவாரணப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளித்தது.

சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இதன்போது கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.கலீல் மற்றும் அதன் உறுப்பினர்கள் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாஹ் ஜும் ஆப் பள்ளிவாயலின் நிருவாகிகள் உட்பட மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள், இப்பொருட்களை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X