2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் குதிரைச்சவாரி

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 06 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

விடுமுறை நாட்களில் உல்லாசப் பயணிகள் மற்றும் சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில்,  முதன்முதலாக குதிரைச்சவாரி மட்டக்களப்பு நகரில்  இன்று வியாழக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து முனைவீதியிலுள்ள சிறுவர் பூங்காவரையுள்ள 300 மீற்றர் வரை குதிரைச்சவாரி செய்வதற்கு  சிறுவன் ஒருவனுக்கு  50  ரூபாய் படி  அறவிடுவதாகவும் இச்சேவைக்கு கொழும்பிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் 3 குதிரைகளை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாநகரசபையால் பராமரிக்கப்படும் நகர மத்தியில் அமைந்துள்ள இரு பூங்காங்களுக்கும்; தனியார் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டு அழகாகவும் தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X