2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வரவு -செலவுத்திட்டம் தயாரிப்பது தொடர்பில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 06 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை  மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் தயாரிப்பது தொடர்பில் 2  நாள் வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

ஆசியமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத்தின் நெறிப்படுத்தலின் கீழ் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமையும்  (04)  நேற்று புதன்கிழமையும் (05) இந்தச் செயலமர்வு நடைபெற்றது. 

இந்தச் செயலமர்வில் ஆசியமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.சுதாகரன் பிரதான வளவாளராக கலந்துகொண்டு விரிவுரை மற்றும்  பயிற்சியும் வழங்கினார்.

இதில் ஆசியமன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகளான றிஷாத் ஷரீப்,  எஸ்.சசிகரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கல்முனை மாநகரசபையின் கணக்காளர் எச்.எம்.எம்.ரஷீத் உட்பட உள்ளூராட்சிமன்றங்களின் நிதிப் பிரிவு உத்தியோகஸ்தர்களும் பங்கேற்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X