2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீதி விபத்தில் சிறுமி மரணம்

A.P.Mathan   / 2014 நவம்பர் 07 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் சந்தியில் இன்று (07) வெள்ளிக்கிழமை இரவு 6.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் எட்டு வயதுச் சிறுமி பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இன்று மாலை கிழங்கு வாங்கச் சென்ற சிறுமி மீது கிரான் சந்தியில் வைத்து வீதியால் அதிவேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியதில் கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயச்சித்திரா (வயது 08) என்ற சிறுமி படுகாயமடைந்தார்.
 
உடனடியாக இச்சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி அவர் இன்றிரவு 10.30 மணியளவில் மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
 
டிப்பர் வாகனச் சாரதி ஏறாவூர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X