2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த மாநாடு

Thipaan   / 2014 நவம்பர் 08 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த மாநாடு மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (08) நடைபெற்றது.

மாவட்ட தொழில் சங்கத் தலைவர் என்.ரவீந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சங்க அங்கத்தவர்களின் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி ஆராயப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லிபாறுக், மேல்மாகாணசபை உறுப்பினரும் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜெகத் குமார, கடுவெல நகரபிதா டீபல் ஹெட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஜே.எப். மனோகிதராஜ், தாய்ச் சங்கப் பொருளாளர் பாசில் அன்வர், ஆகியோர் கலந்து  கொண்டனர்;.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X